கட்டுநாயக்க விமானநிலையம் செல்லும் பயணியுடன் விருந்தினர் ஐவரை அழைத்துச் செல்ல அனுமதி

கட்டுநாயக்க விமானநிலையத்தின், பயணிகள் வெளியேறும் முனையத்திலுள்ள விருந்தினர்களுக்கான பகுதிக்குள், விருந்தினர்கள் ஐவரை அழைத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இன்று (06) முதல் இவ்வனுமதி வழங்கப்படுவதாக, விமானநிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

பயணிகள் மற்றும் விருந்தினர்கள் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பேணுதல் உள்ளிட்ட சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி நடந்துகொள்வது கட்டாயமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று பரவலையடுத்து, கடந்த ஜனவரி மாதம் 28ஆம் திகதி முதல் பயணிகள், ஊழியர்கள் தவிர்ந்த விமான நிலையத்திற்குள் விருந்தினர்கள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து கடந்த ஜூன் 15ஆம் திகதி முதல் பயணிகளுடன் 03 பேர் செல்வதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது ஐவருக்கு அவ்வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.