ஆயுதம் தாங்கியவர்களுக்கு வாக்களிப்பது தவறென்றால் விக்கிணேஸ்வரன் யாரோடு நிற்கிறார் ? – கணேஸ் வேலாயுதம்

இன்று காணப்படும் ஜனநாயக சூழலில் ஆயுதம் தாங்கியவர்களுக்கு வாக்களிப்பது ஆபத்தான நிலையினை ஏற்படுத்தும் என நேற்று (05) கிரான்குளம் பகுதியில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் வடமாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவருமான சி.வி. விக்ணேஸ்வரன் தெரிவித்திருந்த கருத்துக்கு , எதிராக வேலாயுதம் கணேஸ்வரன் கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் இன்று யாரோடு நிற்கிறார்? அவரோடு இருப்போர் யார் என தெரியாமல் பேசுகிறாரா? அல்லது அவரோடு இருப்பவர்களோடு பிரச்சனையா ? என ஐக்கிய மக்கள் சக்தியின் முதன்மை வேட்பாளரான வேலாயுதம் கணேஸ்வரன் இன்று (6) யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயேகேள்வி எழுப்பியுள்ளர்.

அவர் வடமாகாண சபையை நிர்வகித்த காலத்தில் இரவு நேரத்தில் நித்திரைக்கு போனதை தவிர வேறெதையும் மக்களுக்கு செய்தவரில்லை எனவும் கடுமையாக சாடியுள்ளார்.

வீடியோ :

Comments are closed.