வவுனியா ஓஹான் நிறுவன புதுவாழ்வுப்பூங்கா பாடசாலையில் உலக மனநலிவுடையோர் தினம் அனுஷ்டிப்பு.

உலக மனநலிவுடையோர் தினம் 2021.03.21 ஆகும் இதனை மெருகூட்டும் பொருட்டு 22.03.2021 இன்று வவுனியா ஓஹான் நிறுவன புதுவாழ்வுப்பூங்கா மனநலிவுடையோர் பாடசாலையில் கொண்டாடப்பட்டது.

எனினும் எம்மில் பலருக்கு மனநலிவு நோய் பற்றிய விளக்கமிருப்தில்லை மன நலிவு நோய் பற்றிய சிறு விளக்கம் மனநலிவு நோய் ஒரு பரம்பரை நிலைமை.

ஒரு பிள்ளை வழக்கமான 46 நிறமிகளுக்குப் பதிலாக 47 நிறமிகளுடன் பிறக்கும்போது இது சம்பவிக்கிறது . மேலதிகமான நிறமி 21 ஆகும் . மேலதிகமான நிறமி , மூளை வளர்ச்சியில் தாமதத்தையும் உடலில் அநேக இயற்கைக்கு மாறான நிலைகளையும் ஏற்படுத்தும்.

இனம் , பாலினம் , மற்றும் சமூதாய பொருளியல் நிலை எதுவாயிருந்தாலும் மனநலிவு நோய் உள்ள பிள்ளைகள் பிறக்கலாம் மனநலிவு நோய் டிரைசோமி 21 எனவும் அறியப்படுகிறது.

மனநலிவு நோயுடன் பிறக்கும் அநேக பிள்ளைகள் குழந்தைகளாக , பிள்ளைகளாக , மற்றும் வளர்ந்தவர்களாக இருக்கும்போது உடல்நலச் சிக்கல்களை எதிர் நோக்கப்படுகிறார்கள் மனநலிவு நோயுடன் பிறந்த பிள்ளைகள் பின்வரும் மருத்துவ நிலைமைகளுள் ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்டவற்றைக் கொண்டிருப்பார்கள் இதயக் கோளாறு குடலில் அசாதாரண நிலைமை கண் பிரச்சினைகள் காது கேட்டலில் பிரச்சினைகளிற்கு மத்தியில் மனநலிவுள்ள முழுமையானதும் மகிழ்ச்சியானதுமான வாழ்க்கை வாழக்கூடிய வகையில் வளர்ந்து வருவார்கள் அவர்கள் பெரும்பாலும் கலகலப்பாகவும் பழகுபவர்களாகவும் இருப்பார்கள் மேல்நிலைப் பள்ளிப்படிப்பை பூர்த்திசெய்வார்கள் சிலர் வேலைகளை செய்யக்கூடியவர்கள் . சிலர் காதல் உறவுகளைக்கொண்டு திருமணமும் செய்திருக்கிறார்கள்.

20 சதவீதமான மனநலிவுள்ள பிள்ளைகள் 2 வயதிற்குள் இறந்துவிடுவார்கள் ஆயினும் மனநலிவுள்ள பலர் 50 மற்றும் 60 வயது வரைகூட வாழ்கிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.