“கருணா, பிள்ளையானை கைது செய்ய வேண்டும்””

அரந்தலாவை பிக்குகள் கொலையோடு தொடர்புடைய பிரதான சந்தேகநபர்களான கருணா அம்மான், பிள்ளையானை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று சஜித் அணியினர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

அரந்தலாவை பிக்குகள் கொலையோடு தொடர்புடைய பிரதான சந்தேகநபர்கள் ஸ்ரீலங்கா பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான பொதுஜன பெரமுனவிலேயே உறுப்பினர்களாக இருப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஹரிஷன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் அவர் கூறியிருப்பதாவது,

முன்னாள் பிரதி அமைச்சர் கருணா அம்மானும், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையானுமே அரந்தலாவை பிக்குகள் கொலையோடு தொடர்புப்பட்ட சந்தேகநபர்கள்.

இந்த கொலை சம்பவம் இடம்பெற்று 33 கடந்துள்ளது. இக்கொலை சம்பவத்தின் பிரதான சந்தேகநபர்களான பிள்ளையானும் அம்மானும் கைது செய்யப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Comments are closed.