குளவிகளுக்கு பலியாகும் மலையகப் பெண்கள்

லிந்துலை மட்டுகலை தோட்டத்தில் குளவிக்கொட்டுக்கு இலக்கான பெண்ணொருவர் பலியாகியுள்ளார்.

நான்கு பிள்ளைகளின் தாயான 59 வயதுடைய தோட்டத் தொழிலாளரி ஒருவரே இவ்வாறு பலியாகியுள்ளார்.

தேயிலை மலையில் கொழுந்து கொய்துகொண்டிருக்கையிலேயே இன்று மாலை 3.30 மணியளவில் இத்துயர் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குளவிக்கொட்டுக்கு இலக்கான மேலும் 7 பேர் லிந்துலை வைத்தியசாலையில் சிகிச்சைக்களுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

(க.கிஷாந்தன்)

Comments are closed.