வங்கி கணக்குகளை ஹேக் செய்து, சுமார் 17.20 மில்லியன் கொள்ளையடித்த வவுனியா இளைஞர் கைது.

வங்கி கணக்குகளை ஹேக் செய்து, சுமார் 17.20 மில்லியன் ரூபாயை கொள்ளையடித்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ். வவுனியாவைச் சேர்ந்த 29 வயதான இளைஞனை பொலிஸார் ​கைது செய்துள்ளனர்.

ரூ. 17.2 மில்லியன் அமெரிக்காவிலிருந்து ஒரு தனியார் வங்கியில் அவரது கணக்கில் வைப்பிடப்பட்டுள்ளது. சந்தேக நபருக்கு எதிராக 2020 ஏப்ரலில் ரூ. 140 மில்லியன் இலங்கையில் பல வங்கிக் கணக்குகளில் வைப்பிடப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் வசிக்கும் பல்வேறு நபர்களின் கணக்குகளை ஹேக் செய்வதன் மூலம் பணம் வைப்பீடு செய்யப்பட்டுள்ளதாக விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது என பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

இந்த விசாரணைகள் இலங்கை மத்திய வங்கியின் நிதி புலனாய்வு பிரிவு மற்றும் குற்றவியல் புலனாய்வுத் துறையால் நடத்தப்படுகின்றன.

Leave A Reply

Your email address will not be published.