பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்தவேண்டும். ஐ.நாவிடம் சம்பந்தன் கோரிக்கை.

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தின்”இலங்கை மீது பிரேரணையைக் கொண்டுவந்த நாடுகளும், ஐ.நா. மனித உரிமைகள் சபையும், பிரேரணை தீர்மானமாக நிறைவேற அதை ஆதரித்த நாடுகளும் ஒன்றுசேர்ந்து – ஒன்றுகூடி தீர்மானத்தின் பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.”

இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன்.

ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 46 ஆவது அமர்வில் பிரிட்டன் தலைமையிலான நாடுகளால் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்ட தீர்மானமே நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இது தொடர்பில் இரா.சம்பந்தன் ஊடகங்களிடம் கருத்துரைக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவது போன்ற கருமங்களை இலங்கை முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஐ.நா. மனித உரிமைகள் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இவ்விதமான கருமங்கள் நடைபெற வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம். எமது முழுமையான ஒத்துழைப்புகளையும் வழங்குவோம். ஐ.நா. மனித உரிமைகள் சபையில் 22 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேறியுள்ள இந்தத் தீர்மானம் ஒரு நல்ல தீர்மானம். இதை நாங்கள் வரவேற்கின்றோம். தீர்மானத்திலுள்ள பரிந்துரைகள் அனைத்தும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அதுதான் முக்கியம்.

பிரேரணையைக் கொண்டுவந்த நாடுகளும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையும், பிரேரணை தீர்மானமாக நிறைவேற அதை ஆதரித்த நாடுகளும் ஒன்றுசேர்ந்து – ஒன்றுகூடி தீர்மானத்தின் பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.