காடழிப்புக்கு எதிராக கொழும்பில் மாபெரும் பேரணி!

அரசின் மேற்கொள்ளப்பட்டு வரும் காடழிப்பைக் கண்டித்து ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பில் இன்று ஒன்றிணைந்த எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுத்தது.

இந்த எதிர்ப்புப் பேரணி கொழும்பு நகர மண்டபம் அருகில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் ஆரம்பமானது.

விஹாரமகா தேவி பூங்கா வரை பேரணி முன்னெடுக்கப்பட்டது.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

சுற்றாடலுக்கு ஏற்படுத்தப்படும் பாதிப்புகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆதிவாசிகளும் பாரம்பரிய சடங்கொன்றை நடத்தினர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களும் கைகோர்த்திருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.