முல்லைத்தீவில் வானிலை அவதானிப்பு நிலையம் திறந்து வைப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கடற்கரை வீதியில் அமையப்பெற்ற காலநிலை அவதானிப்பு நிலையம் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் மற்றும் வளிமண்டலவியல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் அத்துல கருணாநாயக்க ஆகியோரால் வைபவரீதியாக (23) காலை 8.00 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.

இதன்போது அலுவலக பெயர்ப்பலகை திரைநீக்கம் செய்யப்பட்டு, வானிலை அவதானிப்பு நடவடிக்கைகள் உத்தியோகபூர்வமாகஆரம்பித்த வைக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் இதுவரை காலமும் வானிலை அவதானிப்பு நிலையம் ஒன்று இல்லாமல் இருந்த நிலையில் உலக வளிமண்டலவியல் தினத்தினை முன்னிட்டு குறித்த வானிநிலை அவதானிப்பு நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்ட அசாதாரன சூழல் காரணமாக முப்பது ஆண்டுகளின் பின்னர், உலக வளிமண்டலவியல் தினமான குறித்த வானிலை அவதானிப்பு நிலைய செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன், வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அத்துல கருணாநாயக்க, முல்லைத்தீவு பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் உபாலராஜபக்ஷ வளிமண்டலவியல் திணைக்கள பணிப்பாளர் கே.டி.சுஜீவ, வானிலை அதிகாரி எஸ்.வசந்தகுமார், மற்றும் அதிகாரிகள், மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர், மதகுருமார்கள், உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.