பாரிஸின் உதைபந்தாட்ட அரங்கில் பெருமெடுப்பில் தடுப்பூசி முகாம்!

Stade de France என அழைக்கப்படும் பிரான்ஸின் தேசிய விளையாட்டு அரங்கு பாரிஸின் புறநகரான Seine Saint-Denis இல் அமைந்துள்ளது. தமிழர்கள் உட்பட வெளிநாட்டவர்கள்
நெருக்கமாக வசிக்கும் இந்த மாவட்டம்
வைரஸ் தொற்றினால் மிக மோசமாகப்
பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்
டுள்ளது.

இந்த மாவட்டத்தில் தடுப்பூசி ஏற்றுகின்ற
பணியை வேகமாக முன்னெடுப்பதற் கான ஒரு திட்டமாக அங்கு தேசிய விளையாட்டு அரங்கில் பெரும் தடுப்பூசி
முகாம் ஒன்றை நிறுவ நகரசபை ஆலோ சித்துள்ளது.நீண்ட காலம் மூடிக்கிடக்கும்
Stade de France அரங்கை ஏப்ரல் மாதம்
திறப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இத்தகவலை Seine Saint-Denis நகர மேயர்
தனது ருவீற்றரில் வெளியிட்டிருக்கிறார்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

நாளொன்றுக்கு பத்தாயிரம் பேருக்கு
தடுப்பூசி ஏற்றுவதற்காக அரங்கில் உள்ள
விளையாட்டு வீரர்களுக்கான அறை களில் மருத்துவ வசதிகள் செய்யப்பட வுள்ளன. நூற்றுக்கணக்கான மருத்துவ தொண்டர்கள் மற்றும் முதலுதவி வீரர்களின் ஆதரவு பெறப்படவுள்ளது.

இதேபோன்று நாடெங்கும் 36 இடங்களில்
பாரிய தடுப்பூசி முகாம்கள் இராணுவம்
மற்றும் தீயணைப்பு வீரர்களின் உதவியு
டன் திறக்கப்படவுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.