தம்புள்ளையில் கண்டுபிடிக்கப்பட்ட தேங்காய் எண்ணெய் கண்டெய்னர்.

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தின் பின்பகுதியில் தனியார் களஞ்சியமொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சந்தேகத்திற்கிடமான தேங்காய் எண்ணெய் அடங்கிய கொள்கலன் ஒன்று தம்புள்ளை பொலிஸாரினால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது.

தம்புள்ளை நகர மேயர் ஜாலிய ஓபாதவிற்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய தம்புள்ளை பொலிஸ் குழுவினரால் தேங்காய் எண்ணெய் அடங்கிய குறித்த கொள்கலன் வாகனம் நேற்றிரவு சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த தேங்காய் எண்ணெய் தொகை மனித பாவனைக்கு உகந்ததா என்பது தொடர்பில் உறுதிப்படுத்திக் கொள்ள இன்றைய தினம் சுகாதார பிரிவினரால் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளது.

குறித்த தேங்காய் எண்ணெய் தொகையை விநியோகிப்பதற்கோ அல்லது களஞ்சியப்படுத்துவதற்கோ பெற்றுக் கொடுக்கப்பட்ட சட்டரீதியான ஆவணங்கள் எவையும் இருக்கவில்லை என தம்புள்ளை நகர மேயர் ஜாலிய ஒபாத தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.