முரண்பாடுகளுக்கு முடிவுகட்ட பங்காளிகளை அவசரமாக சந்திக்கின்றார் கோட்டபாய.

ஆளுங் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் இடையில் அடுத்த வாரம் முக்கிய சந்திப்பு நடைபெறவுள்ளது.

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் புதிதாக முன்வைக்கப்பட்டுள்ள யோசனைக்கு பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் சிலர் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து, இறுதி முடிவை எடுக்கும் நோக்கி பங்காளிகளை ஜனாதிபதி சந்திக்கவுள்ளார்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

இந்தச் சந்திப்பின்போது எடுக்கப்படும் தீர்மானத்தின் அடிப்படையிலேயே மாகாண சபைத் தேர்தலை நடத்தும் முறைமை தீர்மானிக்கப்படும் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.