வவுனியா உள்ளிட்ட 13 மாவட்டங்களுக்கு வானிலை தொடர்பில் எச்சரிக்கை!

வவுனியா, முல்லைத்தீவு, புத்தளம், குருநாகல், அனுராதபுரம், பொலன்னறுவ மற்றும் மொனராகல உள்ளிட்ட 13 மாவட்டங்களுக்குத் தீவிர மற்றும் வெப்ப வானிலை எச்சரிக்கையை வானிலை அவதான மையம் விடுத்துள்ளது.

திணைக்களம் வெளியிட்ட வெப்பக் குறியீட்டின்படி, யாழ்ப்பாணம், கிளிநொச்சி,திருகோணமலை, மட்டக்களப்பு, மாத்தளை, அம்பாறை, பதுளை, கம்பஹா, கொழும்பு,களுத்துறை, காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்கள் கடுமையான வெப்பத்தால் பாதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, அனுராதபுரம், பொலன்னறுவ,புத்தளம், குருநாகல் மற்றும் மொனராகல மாவட்டங்களும் வெப்பமான வானிலை காரணமாக பாதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற பகுதிகளில், வெப்பப் பிடிப்புகள், சோர்வு மற்றும் திறந்த வெயிலில் தொடர்ந்து செயற்படுவதால் பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படலாம்.

ஈரப்பதம் மற்றும் அதிகபட்ச வெப்பநிலை மற்றும் மனித உடலில் உணரப்படும் நிலை ஆகியவற்றைப் பயன்படுத்தி வெப்ப குறியீட்டு முன்னறிவிப்பு கணக்கிடப்பட்டதென்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வெளிப்புற தொழிலாளர்கள் தங்கள் கடினமான நடவடிக்கைகளை மட்டுப்படுத்தவும், நிழல் பகுதிகளில் நீர் அருந்திய நிலையில் செயற்படுமாறும் கோரப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.