ரஷ்யாவில் மொத்த கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 45.89 லட்சம் ஆக உள்ளது.

ரஷ்யாவில் மொத்த கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 45.89 லட்சம் ஆக உள்ளது. நாள்தோறும் 8 ஆயிரத்திற்கும் கூடுதலான பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், இங்கிலாந்து நாட்டில் தோன்றிய உருமாறிய கொரோனா வைரசின் பாதிப்புகள் ரஷ்யாவிலும் இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதுபற்றி அந்நாட்டின் பொது சுகாதார கண்காணிப்பகத்தின் தலைவர் அன்ன பொப்போவா கூறும்பொது, இதுவரை இங்கிலாந்தின் 81 கொரோனா மாதிரிகளும் மற்றும் தென்ஆப்பிரிக்காவின் 6 கொரோனா மாதிரிகளும் உறுதிப்படுத்தப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

இந்த பாதிப்புகள் உள்ளவர்கள் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள். இந்த பாதிப்புகள் எல்லாம் ஐரோப்பிய, ஆசிய, தென்அமெரிக்க நாடுகளில் மற்றும் ஆப்பிரிக்க கண்டத்திலும் அதிக அளவில் காணப்படுகின்றன.

உலகம் முழுவதும் இங்கிலாந்து மற்றும் தென்ஆப்பிரிக்க வைரசின் பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டு வருவது அதிகரித்து உள்ளது என அவர் எச்சரிக்கை ஏற்படுத்தி உள்ளார். அதனால், ரஷ்யர்கள் வெளிநாட்டுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்றும் வலியுறுத்தி உள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.