“அன்பான வணிகன்” விற்பனை சந்தை.

நெடுந்தீவு பிரதேச தலைமை சமுர்த்தி முகாமையாளர் இ. ராஜ்பவான் தலைமையில் சமுர்த்தி அபிமானி – 2021 விற்பனை சந்தை “அன்பான வணிகன்” நேற்றைய தினம் (08.04.2021) பிரதேசசெயலக முன்றலில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ். மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர். தி. விஸ்வரூபன் அவர்களும் இணைந்து நெடுந்தீவு பிரதேச செயலாளர் மதிப்புமிக்க திரு. F. C. சத்தியசோதி உதவி பிரதேச செயலாளர் தே. கென்ஸ்மன் வைபவரீதியாக நாடாவினை வெட்டி சந்தையை ஆரம்பித்து வைத்தனர்.

இச் சந்தையில் உள்ளூரில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இவற்றில் கடற்சிப்பி ,முருகைகல் என்பவற்றில் உருவாக்கப்பட்ட அலங்காரப் பொருட்கள், பனை சார் உற்பத்தி பொருட்கள் , தையல் பயிற்சி பெற்றவர்களினால் உற்பத்தி செய்யப்பட்ட ஆடை ஆலங்கார பொருட்கள் , விவசாய உற்பத்திகள் , கருவாடு உற்பத்திகள், புதிய புளி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் சந்தையில் விற்பனைக்காக காட்சிப் படுத்தப்பட்டிருந்தன.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

தமிழ், சிங்கள புத்தாண்டினை முன்னிட்டு நடைபெறும் இவ் விசேட சந்தையில் அத்தியவசியமான நுகர்வுப் பொருட்கள் சலுகை விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.