க.பொ.த உயர்தர பரீட்சை தொழில்சார் பாட விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் திகதி நீடிப்பு

க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தொழில்சார் பாடங்களை தொடர்வதற்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் திகதி எதிர்வரும் 20 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இதற்கான விண்ணப்பங்கள் மற்றும் தொழில் சார் பாடங்கள் நடைபெறும் பாடசாலைகளின் பட்டியலும் கல்வி அமைச்சின் இணையத்தளத்தினூடாக பெற்றுக்கொள்ள முடியும்.

அத்துடன் கல்வி அமைச்சின் கிளையின் 011 2 787 136 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியுமென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அத்துடன் மாகாண இனைப்பாளர்களிடமும் தகவல்களை பெற்றுக்கொள்ள முடிவதுடன் உயர்தர பரீட்சைக்கு தோற்றவிருக்கும் அனவைரும் விண்ணப்பிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில்சார் பாடங்களின் கீழ் இணைக்கப்பட்டுள்ள 26 பாடங்களில் தேவையான பாடங்களை தேர்ந்தெடுக்க முடியும்.

இலங்கையிலுள்ள 311 பாடசாலைகளில் உயர்தர தொழில்சார் பாடங்கள் நடைபெறவுள்ளதுடன் மேலும் 112 பாடசாலைகளில் இந்த பாடங்களை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Comments are closed.