கொழும்பிலிருந்து வெளியேறுவோருக்கு இன்று முதல் PCR பரிசோதனைகள்!

கொழும்பிலிருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்வோருக்கு இன்று முதல் எழுந்தமானமாக பிசிஆர் பரிசோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொரோனா வைரஸ் தடுப்புக்கான தேசிய மத்திய நிலையத்தின் தலைவர் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

தமிழ்- சிங்கள புத்தாண்டு பண்டிகைக் காலத்தையொட்டி கொழும்பிலிருந்து வெளி மாவட்டங்களுக்கு பயணிப்போரை இலக்காகக் கொண்டே மேற்படி பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
புது வருட காலத்தில் பயணத் தடை அல்லது ஊரடங்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நோக்கம் கிடையாது என தெரிவித்துள்ள அவர் மக்கள் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி செயல்படுவது முக்கியம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

நாட்டில் இதுவரை 93 ஆயிரத்து 992 கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.