தீராத தோல் நோய்கள் ஒரே நாளில் தீர எளிமையான முறை.

அரிப்பு, சொறி சிரங்கு, சோரியாஸிஸ் போன்ற அனைத்து விதமான தோல் நோய்களுக்கும் ஒரே நாளில் தீர்வு தரும் அற்புத மூலிகை ஒன்றை பார்ப்போம்.

நம்முடைய தோலில் முக்கியமாக ஏற்படக்கூடிய ஒரு பிரச்சினை அரிப்பு. அதை நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது, உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளின் வெளியேற்றம் தான் அரிப்பு. ரத்தம் சுத்தமாக இல்லாத காரணத்தினால் கூட உடல் அரிப்பு, சொறிசிரங்கு ஏற்படும். சர்க்கரை நோய், நுரையீரல் பிரச்சனை, சிறுநீரக கோளாறு பிரச்சனை, இருப்பவர்களுக்கு கூட சருமம் பாதிக்கும்.

சில பேருக்கு வெயில் காலத்தில் அல்லது மழை காலத்தில் சருமம் பாதிக்கப்பட்டு அரிப்பு ஏற்படும். இதற்காக நாம் ரொம்ப விலை உயர்ந்த கிரீம்களை வாங்கி போடுவதற்கு பதிலாக ரொம்ப எளிமையான முறையில் இதை எப்படி சரி செய்யலாம் என்பதை பார்ப்போம்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

குப்பைமேனி செடி

இது ரோட்டோரத்தில், வீட்டுக்கு பின்னாடி எந்த ஒரு பராமரிப்பும் இல்லாமல் வளரக் கூடிய மூலிகை செடி. இவற்றின் மருத்துவ குணங்கள் தெரியாமல் இருக்கிறோம். இப்பொழுது குப்பைமேனி செடியில் இருக்கக்கூடிய இலைகளை மட்டும் கிள்ளி எடுத்து கொள்ளுங்கள். இதற்கு இன்னொரு பெயர் பூனைவணங்கி பூனைக்கு ஏதாவது உடல் நலம் சரியில்லை என்றால் இந்தச் செடியை தேடி போய் அதோட இலை, தண்டு பகுதியை சாப்பிட்டு உடலை சரி பண்ணிக் கொள்ளும்.

☘️தோல் நோய்க்கு பயன்படுத்துவது

தேவைக்கேற்ற மாதிரி ஒரு கைப்பிடி அளவு குப்பை மேனி இலையை எடுத்து மிக்சியில் போட்டு மையாக அரைத்துக் கொள்ளுங்கள். அரைக்கும்போது தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ளுங்கள்.

இதை நீங்கள் அரிப்பு, சொறிசிரங்கு இருக்கும் இடத்தில் தேய்த்து அரைமணி நேரம் கழித்துக் குளியுங்கள். ஒரு நாளிலேயே நல்ல தீர்வு கிடைக்கும். 10 நாள் இதை தொடர்ந்து செய்து வந்தால், திரும்பியும் வராது.

சோரியாசிஸ் போன்ற தோல் பிரச்சினைகள் இருப்பவர்களுக்கு அரிப்பு அதிகமாகவே இருக்கும். தினமும் சொரியாசிஸ் இருக்கும் இடத்தில் தேய்த்து குளித்து வந்தால் மூன்று நாட்களிலேயே படிப்படியாக குணமாகி விடும்.

இதை நீங்கள் ஒரு மாதம் தொடர்ச்சியாக செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

Leave A Reply

Your email address will not be published.