திருமண நிகழ்வுகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் – சுகாதார தரப்பினர்

இலங்கையில் நடாத்தப்படவுள்ள திருமண நிகழ்வுகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

திருணம வைபவத்தில் இரண்டில் ஒரு பகுதியினர் மாத்திரமே பங்குபற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் குறித்த திருமண நிகழ்வுகளில் பொது சுகாதார பரிசோதகர்கள் அவதான நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

திருமண நிகழ்வில் பங்குபற்றும் அனைவரினதும் பெயர், முகவரி அடங்கிய விபரங்கள் பொது சுகாதார பரிசோதகரிடம் வழங்கி அதற்கான அனுமதியை முன்னதாகவே பெற்றுக்கொள்வது அவசியமென சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

Comments are closed.