கொரோனா பாதுகாப்பு தொடர்பில் செயல்படும் சிவன் அறக்கட்டளை இயக்குனர் கணேஷ் வேலாயுதம்

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்களை பாதுகாப்பது தொடர்பில் பல வேலைத் திட்டங்களை சிவன் அறக்கட்டளையினர் செய்து வருகிறார்கள். அது தொடர்பாக இக் கால கட்டத்தில் கடைப்பிடிக்க வேண்டிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் , முகக் கவசங்கள் மற்றும் உலர் உணவு பொருட்கள் போன்றவற்றை சிவன் அறக் கட்டளை இயக்குனர் கணேஷ் வேலாயுதம் தலைமையின் கீழ் தொடர்ச்சியாக நாட்டின் பல பாகங்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக கண்டி தேசிய வைத்தியசாலை , பேராதனை போதனா வைத்தியசாலை , அக்குறனை பிரதேச செயலகம் போன்றவற்றில் பணிபுரியும் வைத்திய அதிகாரிகள் ,தாதியர் உத்தியோகத்தர்கள் ஆகியோருக்கும் பாதுகாப்பு முகக் கவசங்கள் இலவசமாக வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்வில் வைத்தியசாலை பணிப்பாளர்கள் , மதத் தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.

இதேபோல யாழ்பாணம் மாவட்ட வைத்தியசாலைகள் மற்றும் சிகையரங்கார நிலையங்கள் ஆகியவற்றிற்கும் இவ்வகையான முகக் கவசங்களும் , உதவிகளும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத் தக்கது.

Comments are closed.