கண்டியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

லண்டனிலுள்ள மஸ்ஜிதுல் ஜன்னா மற்றும் கண்டி முஸ்லிம் வர்த்தக சங்கத்தின் அனுசரனையுடன் கண்டி மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனம் கண்டி மாவட்ட ஜம்மிய்யதுலல் உலமா சபை மற்றும் கண்டி கட்டுக்கலை பள்ளிவாசல் , மிஸ்க் இளைஞர் அமைப்பு முதலியவற்றின் ஏற்பாட்டில் கண்டியில் கடந்த 15-04-2021 அன்று கடுமையான மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக பாதிக்கப்பட்ட சிங்கள முஸ்லிம் தமிழ் குடும்பங்களுக்கு உலருணவு நிவாரணப் பொதிகளுடன் தலா ஒவ்வொரு குடும்பங்களுக்கு ருபா 5000 பெறுமதியான நிதி உதவியும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்த வெள்ளத்தினால் சுதுஹ{ம்பொல தெய்யனவல பகுதிகளில் பாதிக்கப்பட்ட சிங்கள முஸ்லிம் தமிழ் ஆகிய 200 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வழங்கி வைககப்பட்டன.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

இந் நிகழ்வில் கண்டி கட்டுக்கலை பள்ளிவாசல் நிர்வாக உத்தியோகஸ்தர்கள், கட்டுக்கலை மிஸ்க் வாலிப சங்கத்தினர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

(இக்பால் அலி)

Leave A Reply

Your email address will not be published.