நான்கு மாதங்களுக்கு எந்தவொரு வைபவங்களுக்கும் அனுமதி இல்லை.

எதிர்வரும் நான்கு மாதங்களுக்கு எந்தவொரு வைபவத்திற்கும் அனுமதி வழங்காமல் இருப்பது குறித்து கருத்திற்கொள்ள உள்ளதாக இராஜாங்க அமைச்சர் டொக்டர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

கடந்த காலத்தில் வழங்கப்பட்டிருந்த வழிகாட்டல்கள் ஓரளவு தளர்த்தப்பட்ட போதிலும் தற்போது அவ்வாறு செயற்பட முடியாது என அவர் சுட்டிக்காட்டினார். சுகாதார வழிகாட்டல்களை மக்கள் கடைப்பிடிக்காததால் மீண்டும் ஆபத்து நிலையை எதிர்கொள்ள நேரிட்டுள்ளது.

தற்போது இளம் சந்ததியினர் மத்தியிலும் இந்த வைரஸ் பரவும் ஆபத்துத் தோன்றியுள்ளது. நாட்டை மூடக்குவதற்கு இதுவரை தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

தற்போதைய நிலைமை குறித்து கண்டறிவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் விசேட கூட்டமொன்று நாளை இடம்பெறும் என இராஜாங்க அமைச்சர் டொக்டர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே குறிப்பிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.