சுகாதார வழிகாட்டுதல்களை ஒப்படைத்தாலும் 2 மாதங்கள் கழித்தே தேர்தல்?

தேர்தலுக்கான வழிமுறைகள் மற்றும் பொதுத் தேர்தல் செயல்முறைகளுடன் கூடிய சுகாதார வழிகாட்டுதல்கள் தயாரிக்கப்பட்டுள்ளன என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜசிங்க கூறியுள்ளார். அது தொடர்பான சுகாதார வழிகாட்டுதல்கள் இன்று (03) தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஜூன் 20 ஆம் திகதி தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டுள்ள போதிலும் , அந்த நாளில் தேர்தலை நடத்த முடியாது எனவும் , சுகாதார வழிகாட்டுதல்களும் பரிசீலிக்கப்பட்ட பின் , மேலும் அதிகமாக இரு மாதங்கள் தேர்தலை நடத்த காலம் தேவைப்படும் எனவும் தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார். நாளைய தினம் தேர்தல் திகதி குறித்த இறுதி முடிவு தெரிய வரும் என நம்பப்படுகிறது .

Comments are closed.