இலங்கையில் விமான நிலையத்தை உடனே மூட முடியாது!அமைச்சர் பிரசன்ன கூறுகின்றார்.

விமான நிலையத்தை மூடுவது அல்லது சுற்றுலாப் பயணிகளின் வருகையைக் கட்டுப்படுத்துவது தொடர்பான முடிவுகள் சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய எடுக்கப்படும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இன்று ஊடகங்களிடம் தெரிவித்தார்.

விமான நிலையத்தின் வழியாக வருபவர்களில் பெரும்பாலானோர் வெளிநாட்டினர் என்பதால் விமான நிலையத்தை உடனடியாக மூட முடியாது எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

எனினும், கொரோனாத் தொற்று தீவிரமடைந்துள்ள இந்தியாவிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளைக் கண்காணிக்க விசேட கண்காணிப்புப் பொறிமுறை ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது எனவும் அவர் கூறினார்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

இந்தியா – இலங்கைக்கு இடையிலான பரஸ்பர விமானப் போக்குவரத்து ஊடாக இலங்கைக்கு வருகை தரும் இந்தியச் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்கனவே பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டார்.

அத்தோடு இந்தியாவிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் தனி ஹோட்டல் அறைகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் எனவும், இவர்களின் வருகையைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.