இலங்கையில் கடந்த 8 நாட்களில் மாத்திரம் 7,481 பேருக்குக் கொரோனா!

இலங்கையில் கடந்த 8 நாட்களில் மாத்திரம் 7 ஆயிரத்து 481 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நேற்று இரண்டாவது நாளாகவும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் இந்தத் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ் – சிங்களப் புத்தாண்டு விடுமுறைக் காலத்தின் பின்னர் கொரோனாத் தொற்றாளர்களின் தொகை சடுதியாக அதிகரித்துவரும் நிலையில் தற்போது 9 ஆயிரத்து 209 நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.