நடிகர் பொன்னம்பலம் வைத்தியசாலையில் அனுமதி

தமிழ் சினிமாவில் வில்லன் பாத்திரத்திங்களில் கலக்கிய நடிகரும், பிக்பாஸ் பிரபலமுமான பொன்னம்பலம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிறுநீரக கோளாறு காரணமாக அடையாறில் உள்ள தனியார் வைத்தியசாலையில் இவர் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தமிழ்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவரது சிகிச்சைக்கு நடிகர் கமல்ஹாசன் உதவி செய்து வருகிறார்.

நடிகர் பொன்னம்பலம் அவர்கள் சிறுநீரக கோளாறு காரணமாக கடந்த சில நாட்களாக பெரும் அவதிபட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Comments are closed.