தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக முன்னிலை.

எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தமிழகத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

இதில் தற்போதைய எதிர்க்கட்சியாகிய திமுக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. திமுக கூட்டணி 76 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. இதில் திமுக 71 இடங்களிலும் காங்கிரஸ், மதிமுக, சிபிஎம், சிபிஐ, விசிக ஆகிய கட்சிகள் தலா ஒரு இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றன.

அதிமுக கூட்டணி 65 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. அதிமுக 63 இடங்களிலும் பாமக, பாஜக தலா ஒரு இடங்களில் முன்னிலை வகித்து வருகிறன. அமமுக 2 இடங்களிலும் மக்கள் நீதி மய்யம் ஒரு இடத்திலும் முன்னிலை வகித்து வருகிறது

Leave A Reply

Your email address will not be published.