நாட்டில் உடன் அமுலுக்கு வரும் வகையில் மேலும் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தபடுகிறது.

நாட்டில் உடன் அமுலுக்கு வரும வகையில் மேலும் சில பிரதேசங்கள் இன்று காலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. 7 கிராம சேவகர் பிரிவுகளும், ஒரு பொலிஸ் பிரிவுமே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி, கொழும்பு மாவட்டத்தின் பிலியந்தலை பொலிஸ் அதிகாரப் பிரிவும், திருகோணமலை மாவட்டத்தின் ஓர்ஸ் ஹில் ,அன்புவழிபுரம் ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

பாணந்துறை தெற்கு பிரதேசத்தின் வடக்கு வேகட, கிரிபேரிய மற்றும் கிழக்கு பாலமுல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்தார்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

இதேவேளை, நுவரெலியா மாவட்டத்தின் – வலப்பன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீலந்தஹின்ன கிராம உத்தியோகத்தர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.