உதயநிதி சென்னையில் வெற்றி

 

சென்னையில் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளரும், திமுக தலைவர் ஸ்டாலின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றுள்ளார்.

சென்னையில் மொத்தமுள்ள 16 தொகுதிகளில் துறைமுகம் தொகுதியைத் தவிர 15 தொகுதிகளிலும் தொடக்கம் முதலே திமுக முன்னிலை பெற்று வருகிறது.

இந்த நிலையில், சென்னை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சார்பில் முதல் முறையாக தேர்தலில் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின் 66,302 வாக்குகளும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாமக வேட்பாளர் ஏ.வி. கஸ்ஸாலி 17,062 வாக்குகளும் பெற்றனர்.

இதையடுத்து, உதயநிதி ஸ்டாலின் 49,240 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

 

 

Leave A Reply

Your email address will not be published.