சென்னை ஆயிரம்விளக்கு தொகுதியில் குஷ்பு தோல்வி

சென்னை ஆயிரம்விளக்கு சட்டமன்ற தொகுதியில் டாக்டர் எழிலன் , பாஜக வேட்பாளர் குஷ்புவை விட 33,044 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் பலத்த பாதுகாப்புடன் எண்ணப்பட்டு வருகின்றன. சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக சார்பில் நடிகை குஷ்பு, திமுக சார்பில் டாக்டர் எழிலன்,  அமமுக சார்பில் வைத்தியநாதன், நாம் தமிழர் கட்சி சார்பில் ஷெரீன் ஆகியோர் போட்டியிட்டனர். மக்கள் நீதி மய்யம் கூட்டணியில், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி வேட்பாளர் கே.எம்.ஷரீப், மக்கள் நீதி மய்யம் சின்னத்தில் போட்டியிட்டார்.

இறுதி சுற்று முடிவில் டாக்டர் எழிலன் 33044  வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் டாக்டர் எழிலன் 71537 வாக்குகளும், குஷ்பு 38493 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.