இருவருக்கு கொரோனா தொற்று உறுதி.100 பேருக்கு பிசீஆர் பரிசோதனை.

இருவருக்கு கொரோனா 100 பேருக்கு பிசிஆர்: வவுனியா குருக்கள் புதுக்குளம் முடக்கப்பட்டது!

இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர்களுடன் தொடர்பில் இருந்த அடிப்படையில் 100 பேர் தனிமைப்படுத்தப்பட்டு பிசிஆர் மாதிரிகள் பெறப்பட்டுள்ள நிலையில் வவுனியா குருக்கள் புதுக்குளம் பகுதி இன்று காலை முதல் முடக்கப்பட்டுள்ளது.

குருக்கள் புதுக்குளம் பகுதியில் கடந்த வாரமளவில் இரண்டு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. அவர்கள் கிராமத்தில் இடம்பெற்ற சில நிகழ்வுகளிலும் கலந்து கொண்டிருந்துள்ளனர்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

இதனையடுத்து குறித்த இருவருடனும் தொடர்புகளை பேணிய 100 பேருக்கு நேற்று முன்தினம் பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டுள்ளதுடன், கிராமத்தில் தொற்றுநீக்கல் செய்யப்பட்டுள்ளது

இதேவேளை குறித்த பகுதி இன்று காலையிலிருந்து முடக்கப்படுவதாக கொவிட் தடுப்பு செயலணியின் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சாவேந்திர சில்வா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.