பிரதேச செயலக பணியாளர்கள் 30 பேருக்கு கொரணா.

மட்டக்களப்பு மாவட்டத்தில் களுவாஞ்சிகுடி பிரதேச செயலகயத்தில் கடமையாற்றும் 12பேர் உட்பட இன்றைய தினம் 30 கொரனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் நா.மயூரன் தெரிவித்தார்.

களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் 60 உத்தியோகத்தர்களுக்கு அன்டிஜன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் அதில் 12பேர் கொரனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேபோன்று மட்டக்களப்பில் 09பேரும் காத்தான்குடியில் 04பேரும் செங்கலடி பகுதியில் ஐந்து பேரும் கொரனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுகாதார நடைமுறைகளை பேணுவதுடன் பொதுமக்கள் அநாவசியமாக வெளியில் செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு சுகாதார பிரிவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.