வெளிநாடுகளில் உள்ளவர்களை அழைத்துவருதல் மட்டுப்படுத்த வேண்டியுள்ளது : சவேந்திர சில்வா

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களை இலங்கைக்கு அழைத்துவரும் நடவடிக்கை எதிர்காலத்தில் மட்டுப்படுத்தப்படும் என்று கொரோனா வைரஸ் நோய் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியான சவேந்திர சில்வா தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தாக்கத்துக்குப் பின்னர் இதுவரையில் 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கையின் தற்போதைய நிலைமையின் அடிப்படையில் தனிமைப்படுத்தல் நிலையங்களில் போதியளவு வசதி இல்லாத காரணத்தால் இவ்வாறு மட்டுப்படுத்தல் நடவடிக்கை மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் கூறினார்.

Comments are closed.