கந்தக்காடு இராணுவ அதிகாரி குடும்பத்துக்கும் ‘கொரோனா’- 300 பேர் தனிமைப்படுத்தல்

கந்தக்காடு போதைப்பொருள் புனர்வாழ்வு நிலையத்துக்கப் பயிற்சி வழங்கவென திசாவெவ இராணுவ முகாமில் இருந்து சென்ற இராணுவ அதிகாரி ஒருவருக்குக் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

அதேவேளை, குறிப்பிட்ட இராணுவ அதிகாரியின் மகள்மார் இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது என இன்று பிற்பகல் பி.சி.ஆர். பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த இராணுவ அதிகாரியின் குடும்பம் இராஜாங்கனையில் வசிக்கின்றது.

கொரோனாத் தொற்றையடுத்து இராஜாங்கனையில் 70 சிறுவர்கள் உட்பட 300 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த இராணுவ அதிகாரியின் 11 வயதான மூத்த மகள் சென்றுவந்த கல்வி வகுப்புகளில் கலந்துகொண்ட மாணவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Comments are closed.