இம்முறை தாயகத்தில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் ‘சைக்கிள்’ : கஜேந்திரகுமார்

“நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுப்போம் என எங்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கின்றது.”

– இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் அக்கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட முதன்மை வேட்பாளருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் எங்கள் கட்சியின் வாக்கு வங்கியில் அதிகரிப்பு ஏற்பட்டது. நாங்கள் ஐந்தாம் இடத்தில் நின்றோம்.

இம்முறை பொதுத்தேர்தலிலும் எங்கள் கட்சியின் வாக்கு வங்கியில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டு நாங்கள் முதலிடத்துக்கு வருவோம்.

மாற்றுத் தலைமைக்கான தகுதியை – அதற்கான அந்தஸ்ஸை இந்தத் தேர்தலில் நாம் நிரூபித்துக் காட்டுவோம்.

பொதுத்தேர்தலுக்கான எமது விஞ்ஞாபனம் விரைவில் வெளியிடப்படும். சமஷ்டி, பொறுப்புக்கூறல் உள்ளிட்ட பல விடயங்கள் அதில் உள்ளடக்கப்படும்” – என்றார்.

Comments are closed.