நடிகர் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன் ஆகியோருக்கு கொரோனா.. மருத்துவமனையில் அனுமதி

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நடிகை ஐஸ்வர்யா ராயுக்கு செய்யப்பட்ட கொரோனா சோதனையில் முடிவு நெகட்டிவ் என்று வந்துள்ளது. மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகம் ஆகி வருகிறது. அதிலும் பாலிவுட் பிரபலங்கள் பலர் வசிக்கும் மும்பையில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு உயர்ந்து வருகிறது. இன்றுதான் பாலிவுட் நடிகை ரேகா வீட்டில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இருவருக்கு பாதிப்பு

இந்த நிலையில் எம்.பி ஜெயா பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் ஆகியோருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் அபிஷேக் பச்சனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஒரே வீட்டில் அமிதாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

ஐஸ்வர்யா ராய் சோதனை

ஐஸ்வர்யா ராய், ஜெயா பச்சன் கொரோனா சோதனை முடிவுகள் வந்துள்ளது. இரண்டு பேருக்கும் கொரோனா இல்லை என்று உறுதியாகி உள்ளது. இது தொடர்பாக அமிதாப் தற்போது டிவிட் செய்துள்ளார். அதில், எனக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளேன். வீட்டு உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்களுக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. இன்னும் முடிவு வரவில்லை. என்னுடன் கடந்த 10 நாட்களாக பழகிய எல்லோரும் உடனே கொரோனா சோதனை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன், என்று அமிதாப் டிவிட் செய்துள்ளார். இதனால் பாலிவுட்டில் பெரிய அளவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிரார்த்தனை

இது தொடர்பாக தற்போது பலரும் பிரார்த்தனை செய்ய தொடங்கி உள்ளனார். அமிதாப் பச்சன் உடனடியாக குணமடைந்து வீடு திரும்ப வேண்டும். உடனே அவர் உடல் நலம் பெற வேண்டும் என்று எல்லோரும் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.

Comments are closed.