யாழில் மேலும் 67 பேருக்குக் கொரோனா! – வடக்கில் இன்று 82 பேருக்குத் தொற்று உறுதி.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 67 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 82 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை இன்று கண்டறியப்பட்டுள்ளது என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம் மற்றும் பல்கலைக்கழக ஆய்வுகூடம் என்பவற்றில் 977 பேரின் மாதிரிகள் இன்று பி.சி.ஆர். பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 67 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 8 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 3 பேரும், வவுனியா மாவட்டத்தில் 4 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு வைத்தியசாலை தனிமைப்படுத்தல் பிரிவில் சேர்க்கப்பட்ட ஒருவருக்குத் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றுபவர்களின் முதல்நிலை தொடர்பாளர்கள் 5 பேருக்குத் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

ஒட்டுசுட்டான் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவருக்குத் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 2 பேருக்குத் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. தருமபுரம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவருக்குத் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்ட வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட 4 பேருக்குத் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்ட 29 பேருக்கும், சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்த 31 பேருக்கும், யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் 7 பேருக்கும் என 67 பேருக்கு கொரோனாத் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட 12 பேருக்குத் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பருத்தித்துறை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 9 பேருக்குத் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் நெல்லியடி சந்தைத் தொகுதி மற்றும் வெதுப்பகத்தில் அடையாளம் காணப்பட்டவர்களின் முதல்நிலைத் தொடர்பாளர்கள்.

சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 3 பேருக்கும், தெல்லிப்பழை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 3 பேருக்கும், அச்சுவேலி, கோப்பாய் வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்ட தலா ஒருவருக்கும் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சாவகச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்த 10 பேருக்குத் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

சங்கானை பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 8 பேருக்குத் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

கோப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 7 பேருக்குத் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் மூவருக்கும், சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 2 பேருக்கும், நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவருக்கும் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.