பாலஸ்தீனம் – காசா பகுதி மீது இஸ்ரேல் வான் படைகள் மற்றும் தரைப்படைகள் இணைந்து உக்கிரத்தாக்குதல்.

பாலஸ்தீனம் – காசா பகுதி மீது இஸ்ரேல் வான் படைகள் மற்றும் தரைப்படைகள் இணைந்து இன்று வெள்ளிக்கிழமை உக்கிர விமான குண்டுவீச்சு மற்றும் ஆட்லறி செல் தாக்குதல்களை நடத்திவருகின்றன.

இஸ்ரேல் – பாலஸ்தீன முரண்பாடுகள் ஆரம்பித்தரதை அடுத்து இரு தரப்பினரும் இன்று 5 ஆவது நாளாகவும் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். திங்களன்று சண்டை தொடங்கியதில் இருந்து காசாவில் சுமார் 119 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். இஸ்ரேலியர்கள் தரப்பில் 8 பேர் இறந்துள்ளனர்.

இதுவரை வான்வழித் தாக்குதலை மட்டுமே இஸ்ரேல் மேற்கொண்டு வந்த நிலையில் இன்று தரைப்படையினரும் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளனர்.

அதேநேரம் ஹமாஸ் விடுதலைப் போராளிகளும் இஸ்ரேல் மீது சரமாரி ரொக்கட் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இஸ்ரேலின் இராணுவம் இன்று வெள்ளிக்கிழமை விமான படை மற்றும் தரைப்படைகளுடன் தாக்குதல்களில் ஈடுபட்டிருந்தாலும் காசாவிற்குள் இதுவரை நுழையவில்லை.

இஸ்ரேல் பீரங்கிகள் உள்ளிட்ட கனரக ஆயுதங்களைக் கொண்டு காசா மீது உக்கிரதாக்குதல் நடத்துவதையும் விமானங்கள் காசா மீது குண்டு மழை பொழிவதை வெளியாகியுள்ள அதிர்ச்சி வீடியோக்களில் காண முடிகிறது.

இதேவேளை, அதிகரித்துச் செல்லும் இந்தப் பதற்ற நிலை முழுமையான போராக மாறும் அபாயம் தொடர்ந்து அதகரித்து வருவதாக ஐ.நா. நேற்று எச்சரித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

காசா பகுதியில் ஏற்பட்டுள்ள வன்முறைகளைக் கட்டுப்படுத்த படையினர் முழு தயார் நிலையில் இருக்க வேண்டும் என இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் பென்னி காண்ட்ஸ் உத்தரவிட்டுள்ளார். அத்துடன், வன்முறையுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 400 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

மோதல்கள் வலுவடையும் நிலையில் காசாவின் எல்லைக்கு அருகே இரண்டு காலாட்படை பிரிவுகளும் ஒரு கவசப் படைப் பிரிவும் நேற்று வியாழக்கிழமை முதல் நிறுத்தப்பட்டு தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளன.

வேறு பிரிவுகளைச் சோ்ந்த குறைந்தது 7,000 இராணுவத்தினரும் எல்லைப் பகுதிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

காசா மற்றும் இஸ்ரேலில் இன்று 5-ஆவது நாளாகத் தொடரும் வன்முறை 2014-ஆம் ஆண்டுக்குப் பின்னரான மிக மோசமானவையாக அமைந்துள்ளன.

ஆரம்பத்தில் கிழக்கு ஜெருசலேமில் பல வாரங்களாக இஸ்ரேல்-பாலஸ்தீனியர்களிடையே நீடித்து வந்த முறுகல் நிலையைத் தொடர்ந்து போர்ப் பதற்றம் அதிகரித்துள்ளது.

முஸ்லிம்களும் யூதர்களும் உரிமை கோரிவரும் புனித வழிபாட்டுத் தலம் ஒன்றை அடிப்படையாக வைத்து மோதல் மேலும் வலுவடைந்துள்ளது. இந்த மத தலத்துக்குள் புகுந்து இஸ்ரேலிய பொலிஸார் நடத்திய மூா்க்கத்தனமான தாக்குதலில் 300 வரையான பாலஸ்தீனர்கள் காயமடைந்தனர். மேலுர் சிலர் உயிரிழந்தனர்.

இதனையடுத்து பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் சரமாரி வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது.அத்துடன், ஹமாஸ் விடுதலைப் போராளிகள் இஸ்ரேல் மீது நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை ஏவித் தாக்குல் நடத்தி வருகின்றனர்.

இவ்வாறான மோதல்கள் தொடரும் நிலையில் அடுத்த கட்டமாக இது முழு அளவிலான மரபுவழிக் போராக மாறும் சாத்தியங்கள் அதிகரித்து வருகின்றன

Leave A Reply

Your email address will not be published.