இலங்கையில் சீரற்ற காலநிலையால் பலியானோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மரணித்தோரின் எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்துள்ளது.

காலியில் இரண்டு பேரும், வாரியபொல, வரக்காபொல மற்றும் பியகம ஆகிய இடங்களில் தலா ஒவ்வொருவரும் சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்துள்ளனர் என்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் இன்றிரவு அறிவித்துள்ளது.

அவர்களில் நான்கு பேர் வெள்ளத்தில் மூழ்கி இறந்துள்ளனர் எனவும், வரக்காபொலையில் மண்சரிவு காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

இதேவேளை, தென்கிழக்கு அரபிக் கடல்பரப்பில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்று இலங்கை மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடற்பரப்பில் நிலவுகின்ற சீரற்ற வானிலை காரணமாக வளிமண்டலவியல் திணைக்களம் இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.