கடல் வழியாக வெளிநாடு செல்ல முயன்ற 30 பேர் வசமாக சிக்கினர்! – 17 பேர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள்.

இலங்கையில் இருந்து சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக வெளிநாடு செல்ல முயற்சித்த 30 சந்தேகநபர்களைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர் என்று கடற்படையின் ஊடகப் பிரிவு இன்று அறிவித்துள்ளது.

சிலாபம், சமிதுகம கடற்கரை பகுதியில் கடந்த 12, 13ஆம் திகதிகளில் கடற்படையினரும், கரையோரப் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளும் இணைந்து நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின்போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் படகுகள் மூலம் வெளிநாட்டுக்கு செல்லத் தயார் நிலையில் இருந்தபோதே கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

இவ்வாறாக கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களில் 17 பேர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், ஏனையோர் மட்டக்களப்பு, முல்லைத்தீவு மற்றும் புத்தளம் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இவர்களை மேலதிக விசாரணைகளுக்காகச் சிலாபம் பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனக் கடற்படையின் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.