அல்-ஜஸீரா மற்றும் ஏபீ செய்தி கட்டிடங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் (video)

காஸாவிலுள்ள அல்-ஜஸீரா மற்றும் ஏபீ செய்தி நிறுவனங்களின் கட்டிடங்களின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த நிறுவனங்கள் அமைந்திருந்த கட்டிடங்கள் மீது இஸ்ரேல் விமானத் தாக்குதலை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 11 மாடிகளை கொண்ட கட்டிடத்தில் குடியிருப்புக்கள் மற்றும் பல நிறுவனங்கள் இருந்துள்ளதாக தெரிய வருகின்றது.

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கட்டிடத்திற்கு பெருமளவு சேதம் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தாக்குதலுக்கு 1 மணி நேரத்துக்கு முன்னர் இஸ்ரேல் இராணுவத்தின் எச்சரிக்கை வந்ததாக அச் செய்தி மேலும் தெரிவிக்கிறது. இத் தாக்குதலின் போது 140 வரையிலான மக்கள் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

6வது நாளாக இன்றும்  தாக்குதல் நீடித்தது. இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான் தாக்குதலில், காசா முனையில் உள்ள மிகப்பெரிய கட்டிடம் ஒன்று கடுமையாக சேதமடைந்தது. பல்வேறு ஊடக அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் வீடுகள் அமைந்துள்ள இந்த கட்டிடம் தகர்க்கப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் மிகப்பெரிய கட்டிடங்களை குறிவைத்து தாக்கப்போவதாகவும், அதனால் கட்டிடங்களில் உள்ளவர்கள் வெளியேற வேண்டும் என்றும் இஸ்ரேல் ராணுவம் எச்சரித்தது. இதனால் அனைவரும் கட்டிடத்தை காலி செய்து வெளியேறிவிட்டனர். இந்த எச்சரிக்கை விடுத்த ஒரு மணி நேரத்தில் ஊடக அலுவலகங்கள் அமைந்துள்ள கட்டிடம் தகர்க்கப்பட்டுள்ளது.
இது ஒருபுறமிருக்க மேற்கு கரையில் போராட்டம் நடத்தி வரும் பாலஸ்தீனர்களுக்கும், இஸ்ரேல் படைகளுக்கும் இடையே தொடர்ந்து மோதல் ஏற்படுகிறது.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே பதற்றத்தை தணித்து போர் நிறுத்த உடன்படிக்கை கொண்டு வரும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் தூதரும் இஸ்ரேல், பாலஸ்தீன விவகாரங்களுக்கான துணை செயலாளரமான ஹாடி அமர் இஸ்ரேல் விரைந்தார். இரு நாடுகளின் தலைவர்களையும் அவர் சந்தித்து பேச உள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.