முல்லைத்தீவு மாவட்டத்தின் கொரோனா தொற்று நிலவரம்.

மாவட்ட தொற்று நோயியல் வைத்திய அதிகாரி வைத்தியர் வி.விஜிதரன்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 109 கொரோனா நோயாளிகள் இனங்கானப்பட்ட நிலையில் தற்போது ஆடைத்தொழிற்சாலையில் ஏற்பட்ட பரவல் காரணமாக உருவாகிய கொத்தணி மூலம் இறுதியாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் மற்றும் அன்டியன் பரிசோதனை இன்று 500க்கு மேற்பட்ட நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 98பேர் நோயாளிகளாக இனங்காணப்பட்டுள்ளனர்.

அவர்களுடன் சேர்த்து இதற்கு முன்னரான பி.சி.ஆர் பரிசோதனை ஊடாக 33ஆக இருந்த தொற்றாளர்களின் எண்ணிக்கை தற்போது மொத்தமாக மொத்தமாக 131 பேர் இவ் ஆடைத்தொழிற்சாலையில் உருவாகிய கொரோனா கொத்தணி ஊடாக உருவாகிய கொரோனா நோயாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

ஆகவே எமது மாவட்டத்தில் முதன்முறையாக பெருமளவான கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட நிலையில் மக்கள் மிகவும் விழிப்புணர்வாக இருக்க வேண்டிய காலகட்டம் உருவாகியுள்ளது.

அநாவசியமற்ற விதத்தில் ஏற்படுத்தப்படுகின்ற பொதுநிகழ்வுகள் முற்றாக தடை செய்யப்பட வேண்டும். அதேநேரத்தில் தேவையற்ற விதத்திலான ஒன்றுகூடல்கள் தவிர்க்கப்பட வேண்டும். மாஸ்க் அணிதல் மற்றும் சமூக இடைவெளிகளை பேணுதல் கட்டாயம் கமைப்பிடிக்க வேண்டும்.

மக்கள் உங்களுடைய விழிப்புணர்வின் மூலமாக மட்டுமே இக் கொத்தணியை வெற்றி கொள்ளக் கூடியதாக இருக்கும். ஆகவே மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சந்தர்ப்பம். தேவையற்ற விதத்தில் கூடுவதனை முற்றாக தவிருங்கள்.

வற்றாப்பளை கண்ணகி அம்மன் பொங்கல் உற்சவம் நடைபெறவிருக்கின்றது. முற்றாக வெளி பக்தர்கள் எவரும் அனுமதிக்கப்படாது கிரிகைகள் மட்டும் இடம்பெறும் சிறிய நிகழ்வாக இடம்பெறும். தேவையற்ற வித்தில் ஒன்றுகூடுவதை தவிர்க்குமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.

Leave A Reply

Your email address will not be published.