உயிர்த்த ஞாயிறு தாக்குதல்! தாக்குதலுக்காக 5 வீடுகள் :மௌனித்த பயங்கரவாதிகள் – 6

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்!
தாக்குதலுக்காக 5 வீடுகளும் – மௌனித்துள்ள பயங்கரவாதிகளும் ….. 6

21ம் திகதி ஏப்ரல் தாக்குதலின் தயாரிப்பு வேலைகளுக்காக என்டேறுமுல்லையிலுள்ள அமைச்சர் ஒருவரின் சகோதரியின் வீட்டைத் தவிர , மேலும் 4 வீடுகளை இவர்கள் தாக்குதல் பணிகளுக்காக பாவித்துள்ளார்கள்.

வெடி பொருட்களை மறைத்து வைத்திருந்த நீர்கொழும்பு ,கட்டானை டேவிட் பெரேரா வீதியில் உள்ள ஒரு வீடு , குண்டுகளை தயார் செய்த பாணதுறை சரிக்கமுல்லை எனுமிடத்தில் உள்ள ஒரு வீடு , தவிர கல்கீசை பன்சல வீதியில் உள்ள அடுக்கு மாடியில் உள்ள ஒரு வீடு ஆகியவற்றை அவர்கள் தொடர்ந்து மாறி மாறி பாவித்து வந்துள்ளார்கள் .

கல்கீசை மாடி வீட்டில்தான் ,சஹரான் பல காலமாக மறைந்து வாழ்ந்துள்ளான். அதைத் தவிர மற்ற வீடுகளுக்கும் இடையிடையே போய் தங்கி வந்துள்ளான்.

குண்டுகளை மறைத்து வைக்க பாவிக்கப்பட்ட வீடு , தெமட்டகொடை இப்ராகிமின் வீடாகும். குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணை செய்த போது அங்கு வசித்த , சங்கிரிலா ஹோட்டல் தற்கொலைதாரியான முகமது இப்ராகிம் இல்ஹாமின் மனைவியான பாத்திமா இல்ஹாம் கூட , தற்கொலைதாரிதான் எனத் தெரிய வந்துள்ளது. அவள் இரண்டாவது தொடர் தாக்குதலுக்காக தயாரான நிலையிலேயே இருந்துள்ளார்.

ஆனால் சங்கிரிலா ஹோட்டல் தாக்குதலின் பின் கிடைக்கும் இல்ஹாமின் தேசிய அடையாள அட்டையை வைத்து , தெமட்டைகொடை வீட்டை போலீசார் சுற்றி வளைத்ததால் பாத்திமாவின் நோக்கம் திசை மாறிவிடுகிறது. போலீசார் வீட்டை சுற்றி வளைத்து உட்செல்ல முற்படும் போது கற்பினியான அவள் , தனது மூன்று குழந்தைகளோடு சேர்த்து தன்னை வெடிக்க வைத்துக் கொள்கிறாள். வீட்டுக்கு நுழைந்த 3 போலீசாரும் அவர்களோடு உயிரிழக்கின்றனர். அதே சமயம் இன்னொரு குண்டும் வீட்டுக்குள்ளிருந்து வெடித்துள்ளது. அது எப்படி வெடித்தது , யார் வெடிக்க வைத்தது என்பது இன்னும் புரியாத புதிராகவே உள்ளது.

இதுவரை நடந்த விசாரணைகளில் , சஹரான் தலைமையிலான தேசிய தவ்ஹித் ஜமாத்தின் அமைப்பு ,நாடு முழுவதும் பரவியுள்ளதாகவே தெரிய வந்துள்ளது. அதற்காக வெளிநாடுகளிலிருந்து கோடிக் கணக்கான பணம் , கடைசி காலங்களில் தொடர்ந்து வந்து கொண்டே இருந்துள்ளது. அதைத் தவிர இந்த நாட்டு பெரும் வியாபாரிகள் கூட பண உதவிகளை தொடர்ந்து வழங்கி வந்துள்ளனர். இதில் அதிகமாக நிதி வழங்கியவர்கள் , தெமட்டகொடை தொழிலதிபரான இப்ராகிமின் குடும்பமாகும்.
இவர்களைத் தவிர நகைக் கடை வைத்திருக்கும் தொழிலதிபர்கள் மற்றும் , இன்னும் சில தொழிலதிபர்கள் குறித்த விபரங்கள் குற்றப் புலனாய்வு துறைக்கு கிடைத்துள்ளன.

கையில் ஒரு சதம் கூட பணமில்லாமல் ஆட்டோவில் திரிந்த சஹரானுக்கு , தெமட்டகொடை இப்ராகிம்தான் முதன் முதலாக வான் ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளார்.

காத்தான்குடியில் பலகையிலான கொட்டகையாக இருந்த சஹரானின் பள்ளிவாசலை திருத்திக் கட்டி எழுப்புவதற்குக் கூட ஆரம்பத்தில் இப்ராகிம்தான் பணம் கொடுத்து உதவியுள்ளார். அது பின்னர் அழகிய ஒரு கட்டிடமாக மாறியது. ஏப்ரல் 21ம் திகதி தாக்குதலின் பின் , பாதுகாப்பு தரப்பு, சந்தேகத்துக்கு இடமான வாகனங்கள் என அட்டவனை இட்டிருந்த 20 வாகனங்களையும் ,இப்ராகிம்தான் வாங்கிக் கொடுத்துள்ளார்.

இப்ராகிம் கொடுத்த பணத்தில்தான், சஹரான் , 30 – 40 ஏக்கர் காணிகளை விவசாயம் செய்யவென குத்தகைக்கு எடுத்து , அவற்றை பயிற்சி முகாம்களாக பாவித்து வந்துள்ளான். வனாத்தவில்லுவில் அகப்பட்டதும் அப்படியான ஒரு தோட்டக் காணியாகும். நுவரெலியா அம்பாந்தோட்டை மற்றும் குருநாகல் ஆகிய இடங்களில் அப்படியான காணிகளோடான பயிற்சி முகாம்கள் இருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

இஸ்லாமிய பயங்கரவாதிகளில் அநேகர் தற்போது கைதாகியிருந்தாலும் , இன்னும் பலர் மௌன போராளிகளாக ஒன்றும் அறியாதவர்கள் போல பதுங்கி இருக்கிறார்கள். அவர்களை தேடிக் கண்டு பிடிப்பது , தொடர்கிறது ……

நாம் நினைப்பது போல சஹரானின் தேசிய தவ்ஹீத் ஜமாத் மட்டும்தான் அல்ஹாவை வணங்காதவர்களை கொலை செய்ய வேண்டும் என நாம் நினைத்தால் அது தவறான எண்ணமாகும். இவர்களை விட படு பயங்கரமாக உணர்ச்சிப் போதனைகளை செய்தோர் வேறு பல இஸ்லாமிய அமைப்புகளில் இருக்கிறார்கள். அவர்கள் செய்த பிரசங்கங்கள் உள்ள வீடியோக்களையும் , ஆவணங்களையும் அவர்கள் அழித்து வருகிறார்கள். அவர்கள் தற்போது ஆயுதம் தூக்கவில்லையே தவிர “அல்ஹாவை ஏற்காதோரை கொல்ல வேண்டும் ” எனும் தீவிர எண்ணங்களை பரப்பியே வந்துள்ளார்கள். இப்போது அவர்களும் மௌனித்தது மாதிரி உள்ளார்கள். அந்த மௌனம் கூட பயங்கரமானதே!

தொடரின் முன்னை பகுதிகள் ……
1. பிரிவினையால் திட்டம் சிதறியது! -01
https://www.facebook.com/photo.php?fbid=10158643674218902
2. தடயங்களும் தேடல்களும் ! – 2
https://www.facebook.com/ajeevan…/posts/10158644898178902
3. வவுணதீவு கொலைகளும் சஹரானின் வேலை ! – 3
https://www.facebook.com/photo.php?fbid=10158649511303902
4.பிளாஸ்டிக் பெரலும், பிளாஸ்டிக் உறையும் ! – 4
https://www.facebook.com/photo.php?fbid=10158652604078902
5. கருத்து மோதல் – கனதியை குறைத்தது – 5
https://www.facebook.com/photo.php?fbid=10158655546158902

Leave A Reply

Your email address will not be published.