கிளிநொச்சி வெற்றிலை கடை உரிமையாளருக்கு கொரணா தொற்று.

கிளிநொச்சி சேவைச்சந்தையில் வெற்றிலை வாணிப உரிமையாளர் ஒருவருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை அடுத்து குறித்த கடை உட்பட ஏனைய வெற்றிலை வாணிபங்களும் பூட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தொற்று நீக்கும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அ.வேழமாலிகிதன் தெரிவித்துள்ளார்.

கட்டட தொகுதியில் காணப்பட்ட 32 கடைகளில் 25 வெற்றிலை கடைகளும் 7 தேங்காய் கடைகளும் உள்ளடங்குகின்றது.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

குறித்த வாணிப உரிமையாளர் 6 நாட்கள் கடைக்கு சமூகமளிக்கவில்லை எனவும், இன்றைய தினம் கடைக்கு வருகை தந்தபோது அவருக்கு பரிசோதனை முன்னெடுக்கப்பட்டதாகவும், குறித்த பரிசோதனையில் கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நிலையில் ஏனைய சேவை சந்தை செயற்பாடுகள் வழமைபோன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தவிசாளர் தெரிவித்தார்.

குறித்த தொற்றின் பின்னரான நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பில் சுகாதார தரப்பினர் ஆராய்ந்து வருகின்றனர். கொத்தணி உருவாகும் சாத்தியங்கள் காணப்படும் பட்சத்தில் குறித்த சேவைச்சந்தை முடக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.