சிறைச்சாலையில் ஒரே நாளில் 45 பேருக்கு கொரோனா தொற்று.

மட்டக்களப்பு சிறைச்சாலையில் ஒரே நாளில் 45 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மட்டக்களப்புச்சிறைச்சாலையில் தெரிவு செய்யப்பட்ட 66பேருக்கு மேற்கொள்ளப்பட்ட Antigen பரிசோதனையில் 45 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதாரப்பணிப்பாளர் Dr.நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.

சிறைச்சாலையில் சில அறிகுறிகள் தென்பட்ட சிலருக்கு மாத்திரமே இப்பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

இதேவேளை தொற்றுக்குள்ளானவர்களை மேல் மாகாணத்தில் உள்ள வட்டரக்க சிறைச்சாலைக்கு சொந்தமான தனிமைப்படுத்தும் சிகிச்சை நிலையத்திற்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave A Reply

Your email address will not be published.