முஜுபூர் ரஹுமானுக்கு கொவிட்

ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜுபூர் ரஹுமானுக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவருக்கு நடத்தப்பட்ட பி சி ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இதனையடுத்து அவர் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் அவரின் குடும்ப உறுப்பினர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அவருடன் கடந்த நாட்களில் தொடர்புகளைப் பேணியவர்கள் தொடர்பான தகவல்களைச் சுகாதாரப் பிரிவினர் சேகரித்து வருகின்றனர்.

இதேவேளை, ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினரான மருதபாண்டி ராமேஷ்வரனுக்கும் நேற்று கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

Leave A Reply

Your email address will not be published.