பெரியகல்லாறு உள்ளக வீதி புணரமைப்பிற்கான அடிக்கல் நடும் நிகழ்வு.

மட்டக்களப்பு பெரியகல்லாறு உள்ளக வீதி புணரமைப்பிற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று 21.05.2021 ஆந் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் பா.சந்திரகுமாரின் முன்மொழிவிற்கு அமைவாக இவ்வாறு ஆரம்பித்துவைக்கப்பட்ட
பெரியகல்லாறு உள்ளக வீதியானது சுமார் 70 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் பிரதேச செயலக பிரிவுகளுக்கான பிரதித் தலைவருமான பா.சந்திரகுமார் உட்பட கட்சியின் பிரதிநிதிகளும், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.