வடக்கில் 24 மணி நேரத்தில்156 பேருக்குக் கொரோனா! – இருவர் பலி.

வடக்கு மாகாணத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 156 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த தொற்றாளர்களில் இருவர் மரணத்தின் பின்னர் பி.சி.ஆர். பரிசோதனையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு நடத்தப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளில் 12 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்.

யாழ். பல்கலைக்கழகத்தில் இன்று சனிக்கிழமை பகல் நடைபெற்ற பி.சி.ஆர். பரிசோதனையில் யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்த 69 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

இதவேளை, இன்று சனிக்கிழமை இரவு வெளியாகிய யாழ். போதனா வைத்தியசாலையின் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 75 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய யாழ்ப்பாணம் மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 23 பேருக்கும், யாழ். போதனா வைத்தியசாலையில் 11 பேருக்கும், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் 02 பேருக்கும், சங்கானை பிரதேச வைத்தியசாலையில் ஒருவருக்கும், அளவெட்டி பிரதேச வைத்தியசாலையில் ஒருவருக்கும், வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையில் ஒருவருக்கும், கோப்பாய் பிரதேச வைத்தியசாலையில் 02 பேருக்கும் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேவேளை, மல்லாவி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 02 பேருக்கும், புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் 03 பேருக்கும், மன்னார் நகர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 17 பேருக்கும், பளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 03 பேருக்கும், பூநகரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 05 பேருக்கும், கிளிநொச்சி மாவட்ட வைத்தியாலையில் இருவருக்கும், பூவசரங்குளம் ஆதார வைத்தியசாலையில் ஒருவருக்கும் கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.