தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்ட பெயர்ப்பலகை மாற்றப்படும்! – சட்டமா அதிபர் திணைக்களம் அறிவிப்பு.

சட்டமா அதிபர் திணைக்களத்தில் புதிதாகத் திறந்து வைக்கப்பட்டுள்ள இலத்திரனியல் நூலகத்தில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்ட பெயர்ப்பலகைக்குப் பதிலாக, தமிழ் மொழியுடன் கூடிய புதிய பெயர்ப்பலகை மாற்றப்பட்டுள்ளது எனச் சட்டமா அதிபர் திணைக்களத்தின் இணைப்பு அதிகாரி அரச சட்டத்தரணி நிஷார ஜயரத்ன ஊடகங்களிடம் இன்று தெரிவித்துள்ளார்.

சட்டமா அதிபர் திணைக்களத்தில் சீன அரசின் நிதி உதவியுடன் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இலத்திரனியல் நூலகத்தை கடந்த 19ஆம் திகதி இலங்கைக்கான சீனத் தூதுவர் குய் ஜெங் கோங் திறந்து வைத்தார்.

இந்த நூலகத்தில் விபரங்கள் பொறிக்கப்பட்ட பெயர்ப்பலகையில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டமைக்கு எதிராகப் பலத்த கண்டனங்கள் எழுந்துள்ளன.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

இந்நிலையிலேயே, குறித்த பெயர்ப்பலகையை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனச் சட்டமா அதிபர் திணைக்களத்தின் இணைப்பு அதிகாரி கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.