முல்லைத்தீவு மாவட்டத்தில் கடும் காற்றுடனான காலநிலையால் 18 குடும்பங்கள் பாதிப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடும் காற்றுடன் கூடிய காலநிலை தாக்கத்தின் காரணமாக 18 குடும்பங்களைச் சேர்ந்த 58 அங்கத்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு புள்ளிவிவர தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று(26) பி.ப 3.00மணிவரை இறுதியாக பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் 13 தற்காலிக வீடுகளும், 05 நிரந்தர வீடுகளுமாக மொத்தம்18 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

ஒட்டிசுட்டான் பிரதேச செயலர் பிரிவில் 03 வீடுகள், புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவில் 01 வீடு, மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவில் 05 வீடுகள், வெலிஓயா பிரதேச செயலர் பிரிவில் 01 வீடு, துணுக்காய் பிரதேச செயலர் பிரிவில் 06 வீடுகள், கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவில் 02 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

குறித்த பாதிப்புக்கள் தொடர்பில் அனைத்து விவரங்களும் பிரதேச செயலகங்கள் ஊடாக சேகரிக்கப்பட்டு மத்திய அனர்த்த முகாமைத்துவ பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.